டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம் + "||" + French Open tennis: Kivitova, Chitsibas advance to the quarterfinals

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்:  கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-3, 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் 20-ம் நிலை வீரரான பல்கேரியாவின் டிமிட்ரோவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் பிரெஞ்ச் ஓபனில் கால்இறுதிக்குள் நுழைந்த முதல் கிரீஸ் நாட்டவர் என்ற பெருமையை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 7-5, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் புக்சோவிக்சை சாய்த்து முதல்முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ரஷியாவின் கச்சனோவை தோற்கடித்து 14-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

முன்னதாக நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான டொமி னிக் திம் (ஆஸ்திரியா) 6-4, 6-4, 5-7, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ‘வைல்டு கார்டு’ வாய்ப்பில் முன்னேறிய ஹூகோ காஸ்டனை (பிரான்ஸ்) போராடி வெளியேற்றி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் இருக் கும் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஷூவாய் ஜாங்கை தோற்கடித்து 2012-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 25 நிமிடம் தேவைப்பட்டது.

மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீராங்கனை லாரா சீஜ்மன்ட் 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஸ்பெயினின் பாலா படோ சாவை விரட்டியடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
5. எஸ்.பி.பி உடல் நிலையில் முன்னேற்றம் - எஸ்.பி.பி மகன் வெளியிட்ட வீடியோ பதிவு
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.