டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரபேல் நடால் முன்னேற்றம் + "||" + Rafael Nadal passes Sinner test to storm into French Open semi-finals

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரபேல் நடால் முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு ரபேல் நடால் முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரர் ரபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பாரிஸ்

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. வழக்கமாக மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு  தற்போது இந்த போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில்,  19 வயது சின்னரை நடால் எதிர்கொண்டார். இதில் 7-6, 6-4, 6-1 என்கிற நேர் செட்களில் நடால் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இந்த வெற்றியின் மூலம் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 13-வது முறையாக அரையிறுதிச் சுற்றுக்கு நடால்  நுழைந்துள்ளார் .


தொடர்புடைய செய்திகள்

1. பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் - அரையிறுதியில் ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வி
பிரான்சில் நடந்து வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரர் நடால் தோல்வியடைந்து வெளியேறினார்.