டென்னிஸ்

நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - ஆன்டி முர்ரே ஆரூடம் + "||" + No one can beat Nadal's French Open record - Andy Murray

நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - ஆன்டி முர்ரே ஆரூடம்

நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது - ஆன்டி முர்ரே ஆரூடம்
நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று ஆன்டி முர்ரே தெரிவித்துள்ளார்.
லண்டன், 

பாரீசில் நடந்த ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சை தோற்கடித்து 13-வது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சிமுகர்ந்து சரித்திரம் படைத்தார். அத்துடன் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையையும் (20 கிராண்ட்ஸ்லாம்) நடால் சமன் செய்தார்.

இந்த நிலையில் அவரது சாதனை குறித்து முன்னாள் நம்பர் ஒன் வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) அளித்த ஒரு பேட்டியில், ‘நடாலின் பிரெஞ்ச் ஓபன் சாதனையை உலகில் யாராலும் முறியடிக்க முடியாது என்று கருதுகிறேன். விளையாட்டு உலகில் மிகச்சிறந்த சாதனைகளில் இதுவும் ஒன்று. அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸ் ஒட்டுமொத்தத்தில் (4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டியை சேர்த்து) 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கிறார். ஆனால் நடாலோ ஒரே கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே அவரை விட இன்னும் ஒன்று தான் பின்தங்கி உள்ளார். உண்மையிலேயே இது நம்ப முடியாத ஒன்று. நடாலின் சாதனையை யாராலும் நெருங்க கூட முடியாது. நடாலும், ஜோகோவிச்சும் தொடர்ந்து உடல்தகுதியுடன் இருந்து ஒரே வயதில் ஓய்வு பெற்றால் அதிக கிராண்ட்ஸ்லாம் வெல்வதில் அவர்களிடையே தான் போட்டி இருக்கும்’ என்றார்.

சர்வதேச களத்தில் 34 வயதான நடாலுக்கு போட்டியாக உள்ள 39 வயதான பெடரர் 20 கிராண்ட்ஸ்லாமும், 33 வயதான ஜோகோவிச் 17 கிராண்ட்ஸ்லாமும் கைப்பற்றி உள்ளனர். அதே சமயம் இவர்கள் பிரெஞ்ச் ஓபனை ஒரே ஒரு முறை மட்டுமே வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால், வாவ்ரிங்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் நடால், வாவ்ரிங்கா கால்இறுதிக்கு முன்னேறினார்.