டென்னிஸ்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகல் + "||" + Djokovic pulls out of Paris Masters with no points to win

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகல்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகல்
பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பிரான்சில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான 33 வயதான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார்.

 அதற்கு பதிலாக 26-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதிவரை வியன்னாவில் நடக்கும் போட்டியிலும், நவம்பர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை லண்டனில் நடக்கும் ஏ.டி.பி. இறுதி சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.