டென்னிஸ்

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் தன்னை தாக்கியதாக அவரது முன்னாள் காதலி குற்றச்சாட்டு + "||" + Olya Sharypova: Ex-girlfriend of tennis star Alexander Zverev alleges abuse, player says 'simply not true'

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் தன்னை தாக்கியதாக அவரது முன்னாள் காதலி குற்றச்சாட்டு

பிரபல டென்னிஸ் நட்சத்திரம் தன்னை தாக்கியதாக அவரது முன்னாள் காதலி குற்றச்சாட்டு
பிரபல டென்னிஸ் நட்சத்திரம் தன்னை தாக்கியதாக அவரது முன்னாள் காதலி குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால் வீரர் அதனை மறுத்து உள்ளார்.
நியூயார்க்

டென்னிஸ் நட்சத்திரம் அலெக்சாண்டர் ஸ்வெரெவின் முன்னாள் காதலி, கடந்த ஆண்டு அமெரிக்க  ஓபன் டென்னிசஸ் போட்டிக்கு  முன்னதாக அலெக்சாண்டர்  தன்னைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.ஆனால் அதனை அலெக்சாண்டர் அதில் உண்மை இல்லை என்று மறுத்து உள்ளார்.

அலெக்சாண்டரின் 23 வயதான முன்னாள் காதலி ஒலியா ஷரிபோவா கூறும் போது

அலெக்சாண்டர் தனது  நியூயார்க்கில் ஒரு ஓட்டல் அறையில் தலையணையால் தன் கழுத்த  நெரிக்க முயன்றார்.உயிருக்கு பயந்து வெறுங்காலுடன் தப்பி ஓடினேன் என கூறி உள்லார். இதுகுறித்து சிஎன்எனுக்கு வாட்ஸ் அப்  ஸ்கிரீன் ஷாட்கள் 2019 ஆகஸ்ட் 23 அன்று இந்த சம்பவம் நடந்ததாக காட்டுகிறது.

ஷரிபோவா ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் தனது காதலனின் பெயரை கூறாமல் இந்த சம்பவத்தை விவரித்து உள்ளார். ஆனால் ரஷிய பத்திரிகைக்கு  அளித்த பேட்டியில் அவர் அலெக்சாண்டர் பெயரை குறிப்பிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு அமெரிக்க ஓபனில் டென்னிஸ் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த 23 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரெவ், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளார்.

ஷரிபோவா சி.என்.என் பத்திரிகையிடம், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை என்றும்  ஏனெனில் நான்அந்த நபரை நேசித்தேன், மேலும் அவருக்கு பிரச்சினைகளை உருவாக்க விரும்பவில்லை" என்று கூறினார். மேலும் நியூயார்க் போலீசார் இது குறித்து புகார் எதுவும் வரவில்லை என தெரிவித்து உள்ளது

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் பிப். 8 முதல் 21வரை நடைபெறும் என அறிவிப்பு!
ஆஸ்திரேலிய ஓபன் பிப். 8 முதல் 21வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. டென்னிசில் மிகச் சிறந்த வீரர் ஜோகோவிச் தான் முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் சொல்கிறார்
டென்னிசில் மிகச் சிறந்த வீரர் என்று கேட்டால், நான் ஜோகோவிச் பெயரைத்தான் கூறுவேன் என முன்னாள் டென்னிஸ் வீரர் பாட் காஷ் சொல்கிறார்
3. உலகின் 6 ஆம் இடத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றினார்
செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, தனது புதிய பயிற்சியாளராக சாச்சா பஜினை தேர்வு செய்துள்ளார்.
4. கர்ப்பம் மற்றும் குழந்தை என்னை ஒரு சிறந்த நபராக ஆக்கியது- சானியா மிர்சா
செரீனாவில்லியம்ஸ் உங்கள் கதை இந்த கடிதத்தை எழுத எனக்கு ஊக்கமளித்தது. #BeingSerena ஆவணப்படம் எனது அனுபவத்தை எதிரொலிக்கிறது… என சானியா மிர்சா கூறி உள்ளார்.