பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் : ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேற்றம் + "||" + Rafael Nadal overcomes Jordan Thompson scare to reach Paris Masters quarter-finals
பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் : ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் நட்சத்திர ஆட்டக்காரரான ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்
நேற்று முன்தினம் சக நாட்டு ஆட்டக்காரரான பாப்லோ கெரேனோ பஸ்டாவை தோற்கடித்து சர்வதேச போட்டிகளில் ஆயிரமாவது வெற்றியை நடால் பதிவு செய்து சாதனை படைத்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலிய வீரர் ஜோர்டான் தாம்சனுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால் மோதினார். இதில் 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு நடால் முன்னேறினார்.
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ரபெல் நடாலை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறி அசத்தி இருக்கிறார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.