டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து மெட்விடேவ் அரைஇறுதிக்கு தகுதி + "||" + Men's Tennis Championship: Medvedev stuns Djokovic to qualify for semifinals

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து மெட்விடேவ் அரைஇறுதிக்கு தகுதி

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து மெட்விடேவ் அரைஇறுதிக்கு தகுதி
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன், 

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (டோக்கியோ 1970 பிரிவு) 5 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 4-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனில் மெட்விடேவ்வை சந்தித்தார். 1 மணி 21 நிமிடம் நடந்த இந்த மோதலில் மெட்விடேவ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். தொடர்ந்து 2-வது வெற்றியை ருசித்த மெட்விடேவ் அரைஇறுதிக்கு முன்னேறினார். அத்துடன் 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடரில் அரைஇறுதிக்குள் நுழைந்த முதல் ரஷிய வீரர் என்ற பெருமையை பெற்றார். 2-வது ஆட்டத்தில் ஆடிய ஜோகோவிச் சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் ஸ்வாட்ஸ்மேனை தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றார். தொடர்ந்து 2-வது தோல்வியை தழுவிய ஸ்வாட்ஸ்மேன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார். இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜோகோவிச்-அலெக்சாண்டர் ஸ்வெரேவ், மெட்விடேவ்-ஸ்வாட்ஸ்மேன் மோதுகிறார்கள். ஜோகோவிச்-ஸ்வெரேவ் இடையிலான ஆட்டத்தில் வெற்று பெறுபவர் அந்த பிரிவில் இருந்து 2-வது வீரராக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைப்பார்.

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் (லண்டன் 2020 பிரிவு) ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-2, 7-5 என்ற நேர்செட்டில் ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்ட ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி ஆறுதல் வெற்றி கண்டார். இந்த வெற்றியை பெற அவருக்கு 74 நிமிடம் தேவைப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீரர் மெட்விடேவ் ‘சாம்பியன்’ டொமினிக் திம்மை வீழ்த்தினார்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
2. ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா
ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
3. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நடாலை வீழ்த்தினார் டொமினிக் திம்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர் நடாலை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 2-வது வெற்றியை பெற்றார்.
4. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: தொடக்க ஆட்டங்களில் நடால், ஜோகோவிச் வெற்றி
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரபெல் நடால், ஜோகோவிச் ஆகியோர் தங்களது தொடக்க லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
5. பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் : ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேற்றம்
பாரீஸ் மாஸ்டர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில், ஸ்பெயினின் நட்சத்திர ஆட்டக்காரரான ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.