டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Men's Tennis Championship: Rafael Nadal, Djokovic advance to semifinals

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரபெல் நடால், ஜோகோவிச் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
லண்டன், 

உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (லண்டன் 2020 பிரிவு) உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரபெல் நடால் (ஸ்பெயின்), நடப்பு சாம்பியனும் 6-ம் நிலை வீரருமான சிட்சிபாஸ்சை (கிரீஸ்) சந்தித்தார். 2 மணி 4 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ்சை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றார். அந்த பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் ரபெல் நடால், டொமினிக் திம் (ஆஸ்திரியா) சமநிலை வகித்தனர். நடாலுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருந்த டொமினிக் திம் முதலிடத்தையும், நடால் 2-வது இடத்தையும் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். தலா ஒரு வெற்றி, 2 தோல்வியை சந்தித்த சிட்சிபாஸ், ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா) அரைஇறுதி வாய்ப்பை இழந்து நடையை கட்டினார்கள்.

நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (டோக்கியோ 1970 பிரிவு) 5 முறை சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை தோற்கடித்தார். 3-வது ஆட்டத்தில் ஆடி 2-வது வெற்றியை ருசித்த ஜோகோவிச் 9-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

இன்று (சனிக் கிழமை) நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் நடால் (ஸ்பெயின்)- மெட்விடேவ் (ரஷியா), ஜோகோவிச் (செர்பியா)- டொமினிக் திம் (ஆஸ்திரியா) ஆகியோர் மோதுகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: கிவிடோவா, சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்குடியரசு வீராங்கனை கிவிடோவா, கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் பிரஜ்னேஷ் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரான்சில் நடந்து வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் கன்னேஸ்வரன் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா அதிர்ச்சி தோல்வி; அஸரென்கா, ஒசாகா முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்டு வெளியேறினார். அஸரென்கா, நவோமி ஒசாகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா, டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
5. எஸ்.பி.பி உடல் நிலையில் முன்னேற்றம் - எஸ்.பி.பி மகன் வெளியிட்ட வீடியோ பதிவு
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.