டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீரர் மெட்விடேவ் ‘சாம்பியன்’ டொமினிக் திம்மை வீழ்த்தினார் + "||" + Tennis Championship: Russian Medvedev beats 'Champion' Dominic Thimma

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீரர் மெட்விடேவ் ‘சாம்பியன்’ டொமினிக் திம்மை வீழ்த்தினார்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ரஷிய வீரர் மெட்விடேவ் ‘சாம்பியன்’ டொமினிக் திம்மை வீழ்த்தினார்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ஆஸ்திரியாவின் டொமினிக் திம்மை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
லண்டன், 

ஏ.டி.பி.இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் 24 வயது ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், அமெரிக்க ஒபன் சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான 27 வயது டொமினிக் திம்மை (ஆஸ்திரியா) எதிர்கொண்டார்.

‘நம்பர் ஒன்’ வீரரான ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்த டொமினிக் திம், மெட்விடேவ் இடையிலான ஆட்டம் கடும் விறுவிறுப்பு நிறைந்ததாக இருந்தது. 2 மணி 42 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 4-6, 7-6 (7-2), 6-4 என்ற செட் கணக்கில் சரிவில் இருந்து மீண்டு வந்து டொமினிக் திம்மை வீழ்த்தி முதல்முறையாக கவுரத்துக்குரிய ஏ.டி.பி. இறுதி சுற்று பட்டத்தை கைப்பற்றியதுடன், ரூ.11½ கோடி பரிசுத் தொகையையும் அள்ளினார்.

‘டாப்-3’ வீரர்களை வீழ்த்தி சாதனை

தோல்வியை சந்திக்காமல் கோப்பையை முத்தமிட்ட மெட்விடேவ் 2009-ம் ஆண்டுக்கு பிறகு (நிகோலாய் டாவ்டென்கோ) இந்த பட்டத்தை வென்ற முதல் ரஷிய வீரர் என்ற பெருமையை பெற்றார். அவர் லீக் ஆட்டத்தில் ஜோகோவிச்சையும், அரைஇறுதியில் ரபெல் நடாலையும் வீழ்த்தி இருந்தார். இறுதி ஆட்டத்தில் திம்மை சாய்த்தார். இதன் மூலம் ஏ.டி.பி. இறுதி சுற்றில் ஒரே போட்டி தொடரில் ‘டாப்-3’ வீரர்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை மெட்விடேட் படைத்தார்.

இரட்டையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நிகோலா மெக்டிக் (குரோஷியா) ஜோடி 6-2, 3-6, 10-5 என்ற செட் கணக்கில் ஜூர்ஜென் மெல்சர் (ஆஸ்திரியா)-எட்வர்ட் ரோஜர் வாசெலின் (பிரான்ஸ்) இணையை தோற்கடித்து ‘சாம்பியன்’ பட்டத்தை தனதாக்கியது.

கடினமான வெற்றி

வெற்றிக்கு பிறகு டேனில் மெட்விடேவ் கூறுகையில், ‘எனது வாழ்க்கையில் கிடைத்த மிகவும் கடினமான வெற்றி இதுவாகும். ஏனெனில் டொமினிக் திம்மை எதிர்த்து ஆடுவது என்பது உண்மையிலேயே கடினமான விஷயமாகும். அவர் சிறந்த நிலையில் இருப்பதை ஆட்டத்தின் போது உணர முடிந்தது. 2-வது செட்டை அவர் வெல்வதற்கு மிகவும் நெருங்கினார். ஆனால் அதனை சமாளித்து நான் கைப்பற்றினேன். 3-வது செட்டில் உடல் ரீதியாக நான் களைப்படைந்து விட்டேன். அதே நேரத்தில் டொமினிக் திம்மும் சில பந்துகளை தவற விட்டதுடன், சற்று மெதுவாக செயல்பட்டார். அவரும் சோர்வடைந்தது தெரிந்தது. சிறந்த வீரரான டொமினிக் திம்மை 3 செட்டுகள் நடந்த ஆட்டத்திலேயே களைப்படைய வைத்ததை பெரிய சாதனையாக நான் நினைக்கிறேன்’ என்றார்.

தோல்வி அடைந்த டொமினிக் திம் கருத்து தெரிவிக்கையில், ‘மெட்விடேவ்வுக்கு எதிராக ஏற்கனவே ஆடியது போன்று தான் இந்த ஆட்டத்திலும் விளையாடினேன். 3-வது செட்டில் அவர் எனது கேமை முறியடித்த விதம் நம்பமுடியாத வகையில் இருந்தது. அத்துடன் பந்தையும் சிறப்பாக திருப்பினார். இந்த போட்டி தொடர் முழுவதும் அவர் சிறப்பாகவே செயல்பட்டார். லீக் ஆட்டங்களில் அவர் ஒரு செட்டை கூட இழக்கவில்லை. உலக தரவரிசையில் 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ள வீரர்களை முறையே அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டியில் வீழ்த்தி இருக்கிறார். எனவே அவர் இந்த பட்டத்திற்கு தகுதியானவர்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
2. உலக டென்னிஸ் தரவரிசையில் ரஷிய வீரர் மெட்விடேவ் 2-வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்
உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், ரபெல் நடாலை பின்னுக்கு தள்ளி முதல்முறையாக 2-வது இடத்துக்கு முன்னேறி அசத்தி இருக்கிறார்.
3. ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2-வது இடத்துக்கு சரிந்தது இந்தியா
ஐ.சி.சி.யின் புதிய நடைமுறையால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 2-வது இடத்துக்கு சரிந்துள்ளது.
4. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து மெட்விடேவ் அரைஇறுதிக்கு தகுதி
உலக தரவரிசையில் ‘டாப்-8’ இடம் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
5. ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: நடாலை வீழ்த்தினார் டொமினிக் திம்
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணி வீரர் நடாலை வீழ்த்தி ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 2-வது வெற்றியை பெற்றார்.