உலகின் 6 ஆம் இடத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றினார் + "||" + KAROLINA PLISKOVA ADDS SASCHA BAJIN TO HER TEAM FOR 2021
உலகின் 6 ஆம் இடத்தில் உள்ள டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா தனது பயிற்சியாளரை மாற்றினார்
செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, தனது புதிய பயிற்சியாளராக சாச்சா பஜினை தேர்வு செய்துள்ளார்.
பராகுவே:
டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 5,205 புள்ளிகளுடன், செக். குடியரசின் டென்னிஸ் வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா உலகின் 6 ஆம் இடத்தில் உள்ளார். கடந்த 2016ம் ஆண்டு, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில்அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டிவரை இவர் முன்னேறினார். ஆனால் இறுதிப்போட்டியில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பரிடம் தோல்வியடைந்தார். அதற்கு பின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பிளிஸ்கோவா, குறிப்பிடத்தக்க வகையில் சாதிக்கவில்லை. இந்த ஆண்டு நடந்த 3 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளிலும் அவர் காலிறுதிக்கு கூட முன்னேறவில்லை.
இந்த ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற அவர், அதன் பின்னர் ரோமில் இறுதி வரை முன்னேறினார். இந்நிலையில் தனது பயிற்சாளர் டானி வல்வேர்டை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ள பிளிஸ்கோவா, புதிய பயிற்சியாளராக சாச்சா பஜினை தேர்வு செய்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்த சாச்சா பஜின், கடந்த 2018 அமெரிக்க ஒப்பன் மற்றும் 2019 ஆஸ்திரேலியன் ஓப்பனில் மகளிர் ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றிய ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். தனது புதிய பயிற்சியாளர் சாச்சா பஜின் மற்றும் உடற்தகுதி பயிற்சியாளர் ஆசுஸ் சிம்சிச்சுடன் இணைந்து நிற்கும் போட்டோவை,டுவிட்டரில் பதிவிட்டு, ‘டீம் பிளிஸ்கோவா 2021’என்று குறிப்பிட்டுள்ளார்.
செரீனாவில்லியம்ஸ் உங்கள் கதை இந்த கடிதத்தை எழுத எனக்கு ஊக்கமளித்தது. #BeingSerena ஆவணப்படம் எனது அனுபவத்தை எதிரொலிக்கிறது… என சானியா மிர்சா கூறி உள்ளார்.