டென்னிஸ்

அபுதாபி ஓபன் டென்னிஸ்: கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி + "||" + Abu Dhabi Open Tennis

அபுதாபி ஓபன் டென்னிஸ்: கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி

அபுதாபி ஓபன் டென்னிஸ்: கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி
அபுதாபி பெண்கள் ஓபன் டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
அபுதாபி, 

அபுதாபி பெண்கள் ஓபன் டென்னிஸ் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், 292-ம் நிலை வீராங்கனையுமான ரஷியாவின் அனஸ்டாசியா காசனோவாவை எதிர்கொண்டார். 72 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கரோலினா பிளிஸ்கோவா 2-6, 4-6 என்ற நேர்செட்டில் காசனோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். சர்வதேச போட்டியில் முதல்முறையாக பிரதான சுற்றுக்குள் நுழைந்த 21 வயதான காசனோவா தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை சந்தித்தது முதல்முறையாகும். 2019-ம் ஆண்டுக்கு பிறகு, தரவரிசையில் 50 இடங்களுக்கு மேல் உள்ள வீராங்கனை ஒருவரிடம் பிளிஸ்கோவா சரண் அடைந்தது இதுவே முதல்முறையாகும்.