டென்னிஸ்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் சிந்து அதிர்ச்சி தோல்வி + "||" + Thailand Open Badminton:sindhu shock defeat in the opening match

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் சிந்து அதிர்ச்சி தோல்வி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டத்தில் சிந்து அதிர்ச்சி தோல்வி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் தொடக்க ஆட்டத்தில் சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பாங்காக், 

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நேற்று தொடங்கியது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்பெல்டை சந்தித்தார். 78 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 21-16,24-26, 13-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத இடைவெளிக்கு பிறகு சர்வதேச போட்டியில் களம் கண்ட சிந்து முதல் ஆட்டத்திலேயே தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அளித்தார்.

ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இந்திய வீரர் சாய் பிரனீத் 16-21, 10-21 என்ற நேர்செட்டில் கன்டபோன் வாங்சரோனிடம் (தாய்லாந்து) தோல்வி அடைந்து நடையை கட்டினார். கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ்-அஸ்வினி ஜோடி 21-11, 27-29, 21-16 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹபிஸ் பைஜல்-குளோரியா விட்ஜே இணையை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா, ஆக்சல்சென் ‘சாம்பியன்’
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கரோலினா, ஆக்சல்சென் ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்றனர்.
2. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.
3. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா, ஸ்ரீகாந்த் வெற்றி
யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது.
4. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி தொடக்கம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பாங்காக்கில் நடக்கிறது.