பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் போட்டி: சீன தைபே வீராங்கனை ‘சாம்பியன்’ + "||" + World Badminton Championships: Chinese Taipei 'Champion'

உலக பேட்மிண்டன் போட்டி: சீன தைபே வீராங்கனை ‘சாம்பியன்’

உலக பேட்மிண்டன் போட்டி: சீன தைபே வீராங்கனை ‘சாம்பியன்’
உலக பேட்மிண்டன் போட்டியில் சீன தைபே வீராங்கனை ‘சாம்பியன்’ பட்டத்தை சொந்தமாக்கினார்.
பாங்காக்,

உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபேயின் தாய் ஜூ யிங், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார். 1 மணி 7 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் தாய் ஜூ யிங் 14-21, 21-8, 21-19 என்ற செட் கணக்கில் கரோலினா மரினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் டென்மார்க் வீரர் அன்டர்ஸ் ஆன்டோன்சென் 21-16, 5-21, 21-17 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீரரும், முன்னாள் சாம்பியனுமான விக்டர் ஆக்சல்செனை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் அரங்கேறியது. சாம்பியன் பட்டம் வென்ற தாய் ஜூ யிங், அன்டர்ஸ் ஆன்டோன்சென் ஆகியோர் தலா ரூ.88 லட்சத்தை பரிசாக பெற்றனர்.