டென்னிஸ்

கொரோனா அச்சுறுத்தல்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பயிற்சி ஆட்டம் ரத்து + "||" + Corona threat: Australian Open tennis training match canceled

கொரோனா அச்சுறுத்தல்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பயிற்சி ஆட்டம் ரத்து

கொரோனா அச்சுறுத்தல்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பயிற்சி ஆட்டம் ரத்து
கொரோனா அச்சுறுத்தலால் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டன.
மெல்போர்ன், 

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் கொரோனா பரவல் காரணமாக 3 வாரம் தள்ளிவைக்கப்பட்டு வருகிற 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மெல்போர்னில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியை தொடங்கி உள்ளனர். 

இந்த நிலையில் மெல்போர்னில் வீரர்கள் தங்கி இருந்த ஒரு ஓட்டலின் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஓட்டலில் தங்கி இருந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 520 பேரை தனிமைப்படுத்தி கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனை செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதன் எதிரொலியாக மெல்போர்ன் பார்க் மைதானத்தில் நேற்று நடக்க இருந்த 6 பயிற்சி ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனில் யார்-யாருடன் மோத வேண்டும் என்பதை குலுக்கல் முறையில் முடிவு செய்யும் நிகழ்ச்சி (டிரா) ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ‘இன்று முதல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறும். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி திட்டமிட்டபடி தொடங்கும். அதனை ரத்து செய்யும் திட்டம் எதுவும் கிடையாது’ என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.