டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் பிரான்ஸ் வீரருடன் மோதல் + "||" + Australian Open tennis: Djokovic clashes with Frenchman in first round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் பிரான்ஸ் வீரருடன் மோதல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச் பிரான்ஸ் வீரருடன் மோதல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி முதல் சுற்றில் ஜோகோவிச் பிரான்ஸ் வீரருடன் மோதுகிறார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 8-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவார்கள் என்பதை நிர்ணயிக்கும் குலுக்கல் (டிரா) நேற்று நடந்தது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) தனது முதல் சுற்றில் தரவரிசையில் 66-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் ஜெர்மி சார்டியை எதிர்கொள்கிறார். ஒற்றையரில் களம் காணும் ஒரே இந்தியரான சுமித் நாகல் முதல் சுற்றில் லிதுவேனியாவின் ரிச்சர்ட்ஸ் பிராங்கிசுடன் மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையரில் நடப்பு சாம்பியன் சோபியா கெனின் (அமெரிக்கா), வைல்டு கார்டு வாய்ப்பு மூலம் பங்கேற்கும் மேடிசன் இங்லியுடன் (ஆஸ்திரேலியா) தனது சவாலை தொடங்குகிறார். இதே போல் 23 கிராண்ட்ஸ்லாம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஜெர்மனியின் லாரா சிஜ்முன்டை முதல் ரவுண்டில் சந்திக்கிறார். ெமல்போர்னில் தற்போது நடந்து வரும் சர்வதேச டென்னிஸ் போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறிய செரீனா வில்லியம்ஸ் வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து திடீரென விலகி உள்ளார். இதனால் ஆஸ்திரேலிய ஓபனுக்கு முன்பாக அவர் முழு உடல் தகுதியை எட்டுவாரா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
2. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்; டானில் மெத்வெடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு டானில் மெத்வடேவ் முன்னேறியுள்ளார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : செரீனா வில்லியம்ஸ் தோல்வி கண்ணீருடன் வெளியேறினார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் நடால், ஆஷ்லி பார்ட்டி அதிர்ச்சி தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கால்இறுதியில் முன்னாள் சாம்பியன் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டனர்.