டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Australian Open tennis: Defending champion Djokovic advances to 2nd round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:  நடப்பு சாம்பியன் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியா நாட்டில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், நடப்பு சாம்பியனான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிக் மற்றும் பிரான்சை சேர்ந்த ஜெரேமி சார்டி ஆகியோர் முதல் சுற்றில் விளையாடினர்.

91 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்தே சிறப்புடன் விளையாடிய ஜோகோவிக் 6-3, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் சார்டியை வீழ்த்தி போட்டியில் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து அமெரிக்காவின் பிரான்சிஸ் டயாபோ உடன் 2வது சுற்றில் ஜோகோவிக் விளையாடுகிறார்.  இன்று நடந்த மகளிர் பிரிவு போட்டியில், நவாமி ஒசாகா மற்றும் செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி: ரோஜர் பெடரர் காயத்தினால் விலகல்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் காயத்தினால் விலகியுள்ளார்.
3. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
4. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
5. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.