டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா + "||" + Australian Open Tennis: Djokovic, Serena in 4th round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், செரீனா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
மெல்போர்ன், 

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-1), 6-4, 3-6, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீரரான டெய்லர் பிரிட்சை (அமெரிக்கா) போராடி வீழ்த்தி 14-வது முறையாக 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். வயிற்று பகுதியில் ஏற்பட்ட தசைநார் கிழிவு காயத்துடன் ஆடிய ஜோகோவிச் அடுத்த சுற்று போட்டிக்கு முன்பாக அந்த காயத்தில் இருந்து மீண்டு களம் இறங்குவேனா? என்பது தனக்கு தெரியவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.

தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் அர்ஜென்டினா வீரர் டிகோ ஸ்வார்ட்ஸ்மான் 3-6, 3-6, 3-6 என்ற நேர்செட்டில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட ரஷியாவின் அஸ்லான் கராட்செவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். அதே சமயம் டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டிமிட்ரோவ் (பல்கேரியா), பெலிக்ஸ் ஆஜெர் அலியாசிம் (கனடா), மிலோஸ் ராவ்னிக் (கனடா), துசென் லாஜோவிச் (செர்பியா) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

செரீனா வில்லியம்ஸ்

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 7 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-6 (7-5), 6-2 என்ற நேர்செட்டில் ரஷியாவின் அனஸ்டசியா போடாபோவாவை வீழ்த்தி 4-வது சுற்றை எட்டினார். ஆஸ்திரேலிய ஓபனில் செரீனாவின் 90-வது வெற்றி இதுவாகும்.

முன்னாள் சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபெரை விரட்டியடித்தார். அடுத்த சுற்றில் ஒசாகா, ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜாவை சந்திக்கிறார். சிமோனா ஹாலெப் (ருமேனியா) சபலென்கா (பெலாரஸ்), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) ஆகியோரும் வெற்றிகரமாக 3-வது சுற்றை கடந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் சாவு
செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் பரிதாபமாக இறந்தார்.
2. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா.
3. கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு.
4. பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்கிறார், பெடரர்
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.
5. மியாமி ஓபன் டென்னிஸ்: போலந்து வீரர் ஹியூபெர்ட் ‘சாம்பியன்’
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீரர் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.