டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி 4-வது சுற்றுக்கு தகுதி + "||" + Australian Open Tennis: Nadal, Ashley Party qualify for 4th round

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி 4-வது சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால், ஆஷ்லி பார்ட்டி 4-வது சுற்றுக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மெல்போர்ன், 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான கேமரூன் நோர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 14-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி செர்பியாவின் கிராஜ்னோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் கால்பதித்தார். சர்வதேச டென்னிசில் மெட்விடேவ் தொடர்ச்சியாக பெற்ற 17-வது வெற்றி இதுவாகும். அத்துடன் 5 செட் வரை நீடித்த ஒரு ஆட்டத்தில் மெட்விடேவ் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

மற்ற ஆட்டங்களில் ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பெரேட்டினி (இத்தாலி), பாபியோ போக்னினி (இத்தாலி), காஸ்பெர் ரூட் (நார்வே), மெக்டொனால்டு (அமெரிக்கா) ஆகியோரும் வெற்றியை ருசித்தனர்.

ஸ்விடோலினா வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் நட்சத்திரம் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 32-ம் நிலை வீராங்கனையான அலெக்சான்ட்ரோவாவை (ரஷியா) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

இதே போல் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 6-4, 6-0 என்ற நேர்செட்டில் கஜகஸ்தானின் புதின்சேவாவை விரட்டியடித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 5-7, 5-7 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கரோலினா முச்சோவாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

மற்ற ஆட்டங்களில் ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), டோனா வெகிச் (குரோஷியா), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), செல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோர் வெற்றி கண்டனர்.

போபண்ணா ஜோடி வெளியேற்றம்

கலப்பு இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-யிங்யிங் டுன் (சீனா) ஜோடி 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜாமி முர்ரே (இங்கிலாந்து)-பெதானி மாடெக் (அமெரிக்கா) இணையிடம் வீழ்ந்து நடையை கட்டியது. இதன் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. 

தொடர்புடைய செய்திகள்

1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா.
2. கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு.
3. பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்கிறார், பெடரர்
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.
4. மியாமி ஓபன் டென்னிஸ்: போலந்து வீரர் ஹியூபெர்ட் ‘சாம்பியன்’
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் போலந்து வீரர் ஹியூபெர்ட் ஹோர்காக்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
5. மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார்.