டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி + "||" + Australian Open Tennis: Naomi Osaka qualifies for the final

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:  நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் மகளில் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜப்பானின் நவோமி ஒசாகா ஆகியோர் விளையாடினர்.

இதில் முதல் செட்டில் முதல் 2 புள்ளிகளை வில்லியம்ஸ் கைப்பற்றி முன்னிலை பெற்றார்.  எனினும், அடுத்தடுத்து நடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 6-3 என்ற புள்ளி கணக்கில் ஒசாகா முதல் செட்டை தன்வசப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து நடந்த 2வது செட்டுக்கான போட்டியில், 6-4 என்ற புள்ளி கணக்கில் ஒசாகா அதனையும் கைப்பற்றி நேர் செட் கணக்கில் செரீனாவை வீழ்த்தினார்.  இதனால், வருகிற 20ந்தேதி நடைபெறும் இறுதி போட்டிக்கு ஒசாகா முன்னேறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டி: இந்தியா காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
2. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
3. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
4. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.