ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா தோல்வி


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் செரீனா தோல்வி
x
தினத்தந்தி 19 Feb 2021 3:09 AM GMT (Updated: 19 Feb 2021 3:09 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் அரைஇறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சை சாய்த்து இறுதி சுற்றை எட்டினார். 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று ஆஸ்திரேலிய வீராங்கனை மார்கரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்ய செரீனா எடுத்த முயற்சியில் மீண்டும் ஒரு முறை சறுக்கல் ஏற்பட்டுள்ளது. செரீனா கண்ணீர் மல்க விடைபெற்றார்.

மற்றொரு அரைஇறுதியில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினா முசோவாவை (செக்குடியரசு) வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தார். நாளை நடக்கும் மகுடத்துக்கான ஆட்டத்தில் ஒசாகா-ஜெனிபர் பிராடி பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-4, 6-2 என்ற நேர்செட்டில் ரஷிய இளம் வீரர் அஸ்லான் கரட்செவை விரட்டியடித்து 9-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

Next Story