டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் + "||" + Australian Open: Naomi Osaka Beats Jennifer Brady To Clinch Women's Singles Title

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:  மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நவோமி ஒசாகா சாம்பியன் பட்டம் வென்றார்.
மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.  இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நவோமி ஒசாகாவும் 
ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) - ஆகிய இருவரும் பலப்பரிட்சை நடத்தினர். 

77 நிமிடங்கள் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் நவோமி ஒசாகா வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார். இரண்டுமுறை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டங்களை வென்ற ஒசாகா, இதுவரை 4  முறை கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டி தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.