ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன்
x
தினத்தந்தி 21 Feb 2021 11:04 AM GMT (Updated: 21 Feb 2021 11:04 AM GMT)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்), வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார். 

இந்த நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா)-- டேனில் மெட்விடேவ் (ரஷியா) இன்று மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஜோகோவிச் வெல்லும் 18-வது கிர்ண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். 


Next Story