டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி; நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார் + "||" + Australian Open tennis tournament; Novak Djokovic wins the title

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி; நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி; நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் டேனில் மெட்விடேவை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில், ஆடவர் பிரிவு ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்விடேவ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விளையாடினர்.

இதில், உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் முதல் செட்டை 7-5 என்ற புள்ளி கணக்கில் போராடி கைப்பற்றினார்.  எனினும், அடுத்து திறமையாக விளையாடி இரு செட்டுகளையும் எளிதில் கைப்பற்றினார்.

இதனால், போட்டியில் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.  இதனால் தொடர்ந்து 3வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்ற சாதனையை அவர் படைத்துள்ளதுடன் இது அவரது 9வது ஆஸ்திரேலிய ஓபன் வெற்றியாகும்.

இதுவரை ஜோகோவிச் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் ‘சாம்பியன்’
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் திம் ‘சாம்பியன்’ பட்டத்தை வென்றார்.