டென்னிஸ்

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’ + "||" + Adelaide International Tennis: Polish player SwiTech 'Champion'

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் ‘சாம்பியன்’ பட்டத்தை தட்டிச்சென்றார்.
அடிலெய்டு,

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) 66 நிமிடங்களில் தோற்கடித்து மகுடம் சூடினார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. முதல் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை 5 ஆட்டங்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 19 வயதான ஸ்வியாடெக் கைப்பற்றிய 2-வது பட்டம் இதுவாகும். தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் ஸ்வியாடெக் இந்த வெற்றியின் மூலம் நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.