டென்னிஸ்

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து + "||" + Switzerland Open Badminton: PV Sindhu in the quarter Finals

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து

சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்றில் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட்டில் அரிஸ் வாங்கை (அமெரிக்கா) விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 14-21, 21-14 என்ற செட் கணக்கில் தாமஸ் ரோக்சலை (பிரான்ஸ்) வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். சாய் பிரனீத், அஜய் ஜெயராம் ஆகியோரும் அடுத்த சுற்றை எட்டினர்.

முன்னதாக நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது சுற்றில் இந்திய முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் 16-21, 21-17, 21-23 என்ற செட் கணக்கில் போராடி பிட்டயாபோர்ன் சவானிடம் (தாய்லாந்து) வீழ்ந்தார். உலக தரவரிசையில் 19-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற தரவரிசையில் நிறைய முன்னேற்றம் காண வேண்டிய நிலையில் உள்ளார். இந்த தோல்வியின் மூலம் அவரது ஒலிம்பிக் தகுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. புர்கா தடைக்கு ஆதரவாக வாக்களித்த சுவிட்சர்லாந்து மக்கள்
சுவிட்சர்லாந்தில் பொது இடங்களில் புர்கா அணிவதை தடை செய்யும் சட்டத்திற்கு பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
2. சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனிடம் வீழ்ந்தார் சிந்து
சுவிட்சர்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் பாசெல் நகரில் நடந்தது.