டென்னிஸ்

பெண்கள் டென்னிஸ்: இந்திய அணிக்கு சானியா, அங்கிதா உள்பட 5 பேர் தேர்வு + "||" + Women tennis For the Indian team Including Sania and Angita 5 people to choose fro

பெண்கள் டென்னிஸ்: இந்திய அணிக்கு சானியா, அங்கிதா உள்பட 5 பேர் தேர்வு

பெண்கள் டென்னிஸ்: இந்திய அணிக்கு சானியா, அங்கிதா உள்பட 5 பேர் தேர்வு
பெண்கள் அணிகளுக்கான டென்னிஸ் போட்டி பெட் கோப்பை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
புதுடெல்லி, 

கடந்த ஆண்டில், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்க ஜாம்பவான் பில்லி ஜீன் கிங்கை கவுரவிக்கும் வகையில் அவரது பெயருக்கு மாற்றப்பட்டது. இதன்படி பில்லி ஜீன் கிங் கோப்பைக்கான உலக குரூப் பிளே-ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட இந்திய அணி இந்த பிரிவில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16, 17-ந்தேதிகளில் லாத்வியாவை எதிர்த்து ஆட உள்ளது. அங்குள்ள ஜர்மலாவில் நடக்கும் இந்த போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வீராங்கனை சானியா மிர்சா, அங்கிதா ரெய்னா, கர்மன் கவுர் தண்டி, ஜீல் தேசாய், ருதுஜா போசேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்திய டென்னிஸ் சங்கத்தின் தேர்வு குழுவினர் ஆன்லைன் மூலம் விவாதித்து அணியை தேர்வு செய்தனர்.