டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், கார்பின் முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + Miami Open Tennis: Medvedev, Corbin Muguruza advance to 4th round

மியாமி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், கார்பின் முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், கார்பின் முகுருஜா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் டேனில் மெட்விடேவ், கார்பின் முகுருஜா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள். சோபியா கெனின், கரோலினா பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
மியாமி, 

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 86-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போப்ரினை சந்தித்தார்.

2 மணி 37 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 7-6 (7-3), 6-7 (7-9), 6-4 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் போப்ரினை போராடி வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார்.

ஜான் இஸ்னர் வெற்றி

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 12-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா அகுட் சரிவில் இருந்து மீண்டு வந்து 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லெனார்ட் ஸ்டிருப்பை விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் 7-6 (7-5), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் கனடாவின் பெலிக்ஸ் அஜெர் அலியாசிம்மை வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), இமில் ரூசுவோரி (பின்லாந்து), டெய்லர் பிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் வெற்றியை ருசித்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் முன்னாள் சாம்பியனுமான பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) 7-6 (7-4), 6-7 (2-7), 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவாவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 2 மணி 44 நிமிடம் அரங்கேறியது.

நவோமி ஒசாகா

முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா காலின்சயாவை தோற்கடித்தார். முதல் செட்டை இழந்த கார்பின் முகுருஜா கடைசி செட்டில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தார். அதன் பிறகு தனது அனுபவத்தின் மூலம் சரிவை சமாளித்து அசத்திய கார்பின் முகுருஜா வெற்றியையும் தனதாக்கினார். இந்த ஆட்டம் 2 மணி 41 நிமிடம் நீடித்தது. 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவை எதிர்த்து ஆட வேண்டிய செர்பியாவின் நினா சோஜனோவிச் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகினார். இதனால் நவோமி ஒசாகா களம் இறங்காமலேயே 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

சோபியா கெனின் தோல்வி

தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 4-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் துனிசியாவின் ஆன்ஸ் ஜாபெரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து நடையை கட்டினார். இதேபோல் 6-வது இடத்தில் உள்ள செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 1-6, 6-4, 4-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜெசிலா பெகுலாவிடம் வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார். மற்ற ஆட்டங்களில் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), மரியா சக்காரி (கிரீஸ்) ஆகியோர் வெற்றி கண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. காணாமல் போன டென்னிஸ் வீராங்கனை... சீனாவுக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை!
சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல் போன சம்பவம் சர்வதேச அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2. பாரிபாஸ் ஓபன் டென்னிஸ்: இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி ‘சாம்பியன்’
பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி, ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா ஆகியோர் ‘சாம்பியன்’ பட்டம் வென்று சாதனை படைத்தனர்.
3. இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: இந்திய வீரர் ராம்குமார் தோல்வி
இன்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில், இந்திய வீரர் ராம்குமார் தோல்வியடைந்தார்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.
5. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.