டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம் + "||" + Miami Open Tennis: Ashley Party advanced to the semifinals

மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேற்றம்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதிக்கு முன்னேறினார்.
மியாமி, 

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 58-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் இத்தாலியின் லோரென்ஜோ சோனிகோவை வெளியேற்றனார். இதே போல் ரஷிய வீரர் ஆந்த்ரே ரூப்லெவ் 6-4, 6-4 என்ற நேர்செட்டில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். இந்த சீசனில் ரூப்லெவ் பெற்ற 19-வது வெற்றி இதுவாகும்.

அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் 3-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 20 வயதான செபாஸ்டியன் கோர்டாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார்.

அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி

பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி, தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் சபலென்காவை (பெலாரஸ்) சந்தித்தார். 2 மணி 16 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஆஷ்லி பார்ட்டி 6-4, 6-7 (5-7), 6-3 என்ற செட் கணக்கில் சபலென்காவை சாய்த்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

இன்னொரு கால்இறுதியில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் லாத்வியா வீராங்கனை செவஸ்தோவாவை பந்தாடி முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார்.

அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி-ஸ்விடோலினா மோதுகிறார்கள். இதில் ஆஷ்லி பார்ட்டி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் உலக தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்துக் கொள்வார். மாறாக ஆஷ்லி பார்ட்டி அரைஇறுதியில் தோல்வி கண்டு ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினால் அவர் ‘நம்பர் ஒன்’ இடத்தை சொந்தமாக்குவார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் தொடர்: டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி
நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில், டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார்.
2. விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-ஆஷ்லி
விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் கெர்பர்-ஆஷ்லி.
3. விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி கால்இறுதிக்கு தகுதி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினார்கள்.
4. விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சானியா-போபண்ணா ஜோடி
விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சானியா-போபண்ணா ஜோடி.
5. சூதாட்ட புகாரில் ரஷிய டென்னிஸ் வீராங்கனை கைது
கடந்த ஆண்டு (2020) நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் யானா சிஜிகோவா (ரஷியா)-மாடிசன் பிரெங்லி (அமெரிக்கா) ஜோடி நேர்செட்டில் ருமேனியாவின் ஆன்ட்ரியா மிது-பாட்ரிசியா மரியா டிக் இணையிடம் தோல்வி கண்டது.