டென்னிஸ்

ஒலிம்பிக் திட்டத்தில் சானியா மிர்சா சேர்ப்பு + "||" + Olympic-bound tennis ace Sania Mirza included in TOPS after gap of four years

ஒலிம்பிக் திட்டத்தில் சானியா மிர்சா சேர்ப்பு

ஒலிம்பிக் திட்டத்தில் சானியா மிர்சா சேர்ப்பு
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களது பயிற்சி உள்ளிட்ட செலவுகளுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உதவி அளித்து வருகிறது.

கடைசியாக 2017-ம் ஆண்டு இந்த திட்டத்தில் இடம் பிடித்து இருந்த இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா காயம் காரணமாக அதில் இருந்து விலகினார். இந்த நிலையில் 34 வயதான சானியா மிர்சா மீண்டும் ஒலிம்பிக் பதக்க வாய்ப்புள்ள வீராங்கனைகளுக்கான சிறப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. குழந்தை பெற்றுக்கொண்டதால் சானியா மிர்சா 2 ஆண்டுக்கு மேலாக விளையாடாவிட்டாலும், டென்னிஸ் சங்கத்தின் சிறப்பு திட்டத்தின் கீழ் அவரது தரவரிசை பாதுகாக்கப்பட்டதால் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக், உலக சாம்பியன்கள் உள்பட இந்திய ஓபன் பேட்மிண்டனில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
மொத்தம் ரூ.3 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் அடுத்த மாதம் (மே) 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது.
2. ‘டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்’ குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் பேட்டி
இந்த நிலையில் மேரிகோம் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்.
3. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தடகளத்தில் மேலும் 3 இந்தியர்கள் தகுதி
தேசிய ஓபன் நடைப்பந்தய சாம்பியன்ஷிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று நடந்தது.
4. நடிகையாகும் சானியா மிர்சா
சானியா மிர்சா நடிகை ஆகிறார்.