டென்னிஸ்

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி + "||" + Monte Carlo Masters: Djokovic stunned by Evans

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் 3-வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
மொனாக்கோ,

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 5-7 என்ற நேர்செட்டில் 33-ம் நிலை வீரரான இங்கிலாந்தின் டேனியல் இவான்சிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். 

இதன் மூலம் இந்த ஆண்டில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று இருந்த ஜோகோவிச்சின் வீறுநடை முடிவுக்கு வந்தது. இதேபோல்தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 4-6, 6-7 (7-9) என்ற நேர்செட்டில் 15-ம் நிலை வீரரான டேவிட் கோபினிடம் (பெல்ஜியம்) வீழ்ந்தார். 

மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் டிமிட்ரோவை (பல்கேரியா) விரட்டினார்.