டென்னிஸ்

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன் + "||" + Monte Carlo Masters Tennis: Greek player Tsitsipas champion

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்:கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்
மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
மான்டே கார்லோ, 

மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடம் வகிக்கும் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 6-3, 6-3 என்ற நேர் செட்டில் ஆந்த்ரே ரூப்லெவை (ரஷியா) வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை சூடினார். இது ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் மாஸ்டர்ஸ் போட்டியாகும். இத்தகைய போட்டியில் சிட்சிபாஸ் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

ரூ.2¼ கோடியை பரிசுத்தொகையாக அள்ளிய 22 வயதான சிட்சிபாஸ் கூறுகையில், ‘இந்த வாரம் எனக்கு நம்பமுடியாத அளவுக்கு அமைந்துள்ளது. மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த வாரம் இது தான்’ என்று கூறி உணர்ச்சி வசப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் விலகல்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.
2. டென்னிஸ் விளையாட்டுக்கு முழுக்கு போட தயாராகிறாரா ரோஜர் பெடரர்!
சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து அவருடைய பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.
3. இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபட விருதுகள் ஊக்குவிக்கும் : மனம் திறந்த டென்னிஸ் வீராங்கனை
2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவர் அங்கீதா ரெய்னா
4. உலக பெண்கள் டென்னிஸ் போட்டி: இன்று தொடங்குகிறது
‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
5. டிரான்சில்வேனியா ஓபன் டென்னிஸ் :சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி பட்டம் வென்றார் அனெட் கொன்டாவீட்
இந்த வருடத்தில் மட்டும் அனெட் கொன்டாவீட் வெல்லும் 4 வது டென்னிஸ் பட்டம் இதுவாகும்