டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி + "||" + Madrid Open tennis: Ashleigh Barty in the semifinals

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 12-வது இடத்தில் இருக்கும் செக்குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா 6-4, 7-5 என்ற நேர்செட்டில் பெலின்டா பென்சிக்கை (சுவிட்சர்லாந்து) தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். அரைஇறுதியில் ஆஷ்லி பார்ட்டி-பாலா படோசா மோதுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ‘சாம்பியன்’
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.
2. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்’
ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்து சபலென்கா சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.