டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், நடால் + "||" + Italy Open Tennis: Djokovic, Nadal in the quarterfinals

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், நடால்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், நடால்
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கால்இறுதியில் ஜோகோவிச், நடால்.
ரோம், 

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 5 முறை சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-1 என்ற நேர் செட்டில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச்சை (ஸ்பெயின்) துவம்சம் செய்து கால்இறுதிக்கு முன்னேறினார். முதல்முறையாக இந்த ஆட்டத்தில் 25 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் முன்னிலையில் உற்சாகமாக ஆடியதாக ஜோகோவிச் குறிப்பிட்டார். ஜோகோவிச் கால்இறுதியில் சிட்சிபாசை (கிரீஸ்) எதிர்கொள்கிறார். முன்னதாக சிட்சிபாஸ் 7-6 (7-3), 6-2 என்ற நேர் செட்டில் பெரேட்டினியை (இத்தாலி) வெளியேற்றினார்.

மற்றொரு ஆட்டத்தில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-6, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் டெனிஸ் ஷபோவலோவை (கனடா) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். 3-வது செட்டில் தோல்வியின் விளிம்புக்கு சென்ற நடால் அதன் பிறகு டைபிரேக்கர் வரை போராடி தப்பியிருக்கிறார். இந்த ஆட்டம் 3½ மணி நேரம் நீடித்தது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் குடெர்மிடோவாவை (ரஷியா) வீழ்த்தி கால்இறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் மாட்ரிட் ஓபன் சாம்பியனான சபலென்கா (பெலாரஸ்) 5-7, 3-6 என்ற நேர் செட்டில் கோகோ காப்பிடம் (அமெரிக்கா) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தாா். அதே சமயம் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஸ்வியாடெக் (போலந்து), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஜெஸ்சிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) தன்னை எதிர்த்த ஏஞ்சலிக் கெர்பருக்கு (ஜெர்மனி) எதிராக முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்று 2-வது செட்டில் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த போது காயமடைந்தார். இடது பின்னங்காலில் ஏற்பட்ட வலியால் ஹாலெப் பாதியிலேயே விலகினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சூதாட்ட புகாரில் ரஷிய டென்னிஸ் வீராங்கனை கைது
கடந்த ஆண்டு (2020) நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் யானா சிஜிகோவா (ரஷியா)-மாடிசன் பிரெங்லி (அமெரிக்கா) ஜோடி நேர்செட்டில் ருமேனியாவின் ஆன்ட்ரியா மிது-பாட்ரிசியா மரியா டிக் இணையிடம் தோல்வி கண்டது.
2. செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் சாவு
செம்மஞ்சேரியில் மாடியில் இருந்து தவறி விழுந்த டென்னிஸ் பயிற்சியாளர் பரிதாபமாக இறந்தார்.
3. மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முச்சோவா.
4. கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு
கொரோனா பரவல் எதிரொலி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தள்ளிவைப்பு.
5. பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்கிறார், பெடரர்
20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையாளரான முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதை உறுதி செய்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை