டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிக் அரை இறுதிக்கு தகுதி + "||" + Italian Open tennis: Novak Djokovic advances into Semifinals

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி: ஜோகோவிக் அரை இறுதிக்கு தகுதி

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டி:  ஜோகோவிக் அரை இறுதிக்கு தகுதி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் நோவக் ஜோகோவிக் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ரோம்,

இத்தாலி நாட்டில் நடந்து வரும் ஆடவர் ஒற்றையர் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் காலிறுதி போட்டியில் செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிக் மற்றும் கிரீஸ் நாட்டின் ஸ்டெபானோஸ் சிட்சிபாஸ் ஆகியோர் விளையாடினர்.

நடப்பு சாம்பியனான ஜோகோவிக் நேற்றைய ஆட்டத்தில் பெய்த மழையின் பொழுது, 6-4, 2-1 என்ற செட் கணக்கில் பின்தங்கி காணப்பட்டார்.  மழையால் ஆட்டம் இன்று தொடர்ந்தது.

இதில், அதிரடியாக விளையாடிய ஜோகோவிக் 4-6, 7-5, 7-5 என்ற செட் கணக்கில் போராடி வெற்றியை கைப்பற்றினார்.  இந்த போட்டி ஏறக்குறைய 3 மணிநேரம் 16 நிமிடங்கள் வரை நீடித்தது.  இந்த வெற்றியால், இத்தாலி நாட்டின் லாரென்ஜோ சொனேகோவை அரை இறுதி போட்டியில் ஜோகோவிக் எதிர்கொள்கிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
2. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.
3. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: போராடி வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு பெடரர் தகுதி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் கடுமையாக போராடி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.