இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் நடால்


இத்தாலி ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்  நடால்
x
தினத்தந்தி 16 May 2021 7:39 PM GMT (Updated: 2021-05-17T01:09:40+05:30)

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்

ரோம்,

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வந்தது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரர் ஜோகோவிச்சும் மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடாலும் மோதினர்.  மிகவும் பரபரப்பாக இந்த ஆட்டம் நடைபெற்றது. 

2 மணி நேரம் 49 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-5, 1-6, 6-3  என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.  ரபேல் நடால் வெல்லும் 10-வது இத்தாலி ஓபன் டென்னிஸ் பட்டம் இதுவாகும்.  

Next Story