டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா விலகல் + "||" + Former champion Stan Wawrinka withdraws from French Open

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா விலகல்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: வாவ்ரிங்கா விலகல்
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரையில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 30-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்குகிறது.

 இந்த போட்டியில் இருந்து 2015-ம் ஆண்டு சாம்பியனான ஸ்டான் வாவ்ரிங்கா (சுவிட்சர்லாந்து) நேற்று விலகினார். வாவ்ரிங்கா கடந்த மார்ச் மாதம் இடது காலில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்திருந்தார். அதில் இருந்து அவர் முழுமையாக மீளாததால் இந்த முடிவை எடுத்துள்ளார். 36 வயதான வாவ்ரிங்கா விம்பிள்டனுக்கு முன்பாக நடக்கும் புல்தரை டென்னிஸ் போட்டிகளில் களம் திரும்ப திட்டமிட்டுள்ளார்.