பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் விலகல்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப் விலகல்
x
தினத்தந்தி 21 May 2021 9:41 PM GMT (Updated: 2021-05-22T03:11:31+05:30)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து சிமோனா ஹாலெப் விலகினார்.

பாரீஸ், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற களிமண் தரை போட்டியான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 30-ந்தேதி தொடங்கி ஜூன் 13-ந்தேதி வரை பாரீசில் நடக்கிறது. இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் (ருமேனியா) நேற்று அறிவித்தார். கடந்த வாரம் நடந்த இத்தாலி ஓபன் போட்டியின் போது இடது பின்னங்காலில் காயமடைந்த அவர், 2-வது சுற்றில் பாதியிலேயே ஒதுங்கினார். இதையடுத்து பரிசோதனை செய்ததில், பின்னங்கால் தசையில் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. போட்டிக்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதால் அதற்குள் காயத்தில் இருந்து முழுமையாக மீள முடியாது என்பதால் கனத்த இயத்தோடு பிரெஞ்ச் ஓபனை தவற விடுவதாக அவர் கூறியுள்ளார். 29 வயதான ஹாலெப் 2018-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story