டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா, ராம்குமார் தோல்வி + "||" + French Open: Ankita Raina, Ramkumar, Sumit Nagal bow out in singles qualifying second round

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா, ராம்குமார் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா, ராம்குமார் தோல்வி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.
இதன் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 182-வது இடம் வகிக்கும் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, 125-ம் நிலை வீராங்கனையான கிரீத் மினெனை (பெல்ஜியம்) எதிர்கொண்டார். இதில் கிரீத்தின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அங்கிதா 2-6, 0-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதே போல் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் 
தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 1-6, 2-6 என்ற நேர் செட்டில் டெனிஸ் இஸ்தோமினிடம் (உஸ்பெகிஸ்தான்) வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்.