பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரரை சந்திக்கிறார் நடால்


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரரை சந்திக்கிறார் நடால்
x
தினத்தந்தி 27 May 2021 11:36 PM GMT (Updated: 27 May 2021 11:36 PM GMT)

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்ற குலுக்கல் (டிரா) நேற்று முடிவு செய்யப்பட்டது.இதன்படி 13 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்), நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் ஒரே வரிசையில் இடம் பெற்றுள்ளனர். அதாவது இவர்கள் அரைஇறுதிக்குள் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. அந்த வகையில் பெடரர்- ஜோகோவிச் கால்இறுதியில் சந்திக்க வேண்டியது வரலாம். ரபெல் நடால் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்ரினை சந்திக்கிறார். ஜோகோவிச் முதல் ரவுண்டில் அமெரிக்காவின் டெனிஸ் சான்ட்கிரீனுடன் மோதுகிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஸ்வியாடெக் (போலந்து) தனது சவாலை கஜா ஜூவானுடன் (சுலோவேனியா) தொடங்குகிறார். ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), அமெரிக்காவின் பெர்னர்டா பெராவை முதல் சுற்றில் எதிர்கொள்கிறார். அரைஇறுதியில் ஆஷ்லி-ஸ்வியாடெக் மோத வாய்ப்புள்ளது.


Next Story