டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் சுமித் நாகல் தோல்வி + "||" + Sumit Nagal loses French Open qualifiers

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் சுமித் நாகல் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் சுமித் நாகல் தோல்வி
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 3-6, 3-6 என்ற நேர் செட்டில் அலெஜான்ட்ரோ தபிலோவிடம் (சிலி) தோல்வியை தழுவினார். ஏற்கனவே அங்கிதா ரெய்னா, ராம்குமார், பிரஜ்னேஷ் குணேஸ்வரன் ஆகியோரும் வெளியேறிய நிலையில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. வருகிற 30-ந்தேதி தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் பிரதான சுற்றில் இரட்டையர் பிரிவில் இ்ந்தியா சார்பில் ரோகன் போபண்ணா, திவிஜ் சரண், அங்கிதா ரெய்னா ஆகியோர் விளையாட இருக்கிறார்கள்.