சூதாட்ட புகாரில் ரஷிய டென்னிஸ் வீராங்கனை கைது


சூதாட்ட புகாரில் ரஷிய டென்னிஸ் வீராங்கனை கைது
x
தினத்தந்தி 4 Jun 2021 5:35 PM GMT (Updated: 4 Jun 2021 5:35 PM GMT)

கடந்த ஆண்டு (2020) நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் யானா சிஜிகோவா (ரஷியா)-மாடிசன் பிரெங்லி (அமெரிக்கா) ஜோடி நேர்செட்டில் ருமேனியாவின் ஆன்ட்ரியா மிது-பாட்ரிசியா மரியா டிக் இணையிடம் தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தின் முடிவு குறித்து வழக்கத்தை விட அதிகமானவர்கள் பணம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து சந்தேகத்தின் பேரில் பிரான்ஸ் போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விசாரணையை தொடங்கினர். போட்டியின் வீடியோவை ஆய்வு செய்த போலீசாருக்கு இரட்டையர் தரவரிசையில் 101-வது இடத்தில் இருக்கும் 26 வயதான ரஷிய வீராங்கனை யானா சிஜிகோவா 2-வது செட்டின் 5-வது கேமில் வழக்கத்துக்கு மாறாக இரட்டை தவறு இழைத்தது சந்தேகத்தை வலுப்படுத்தியது. இந்த ஆட்டத்தில் மேட்ச் பிக்சிங் (சூதாட்டம்) நடந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கருதி தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் இரட்டையர் முதல் சுற்றில் தோல்வி அடைந்து நடையை கட்டிய ரஷியாவின் சிஜிகோவாவை பிரான்ஸ் போலீசார் நேற்று கைது செய்தனர். சூதாட்ட விவகாரம் குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story