டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன்; என்னை வீழ்த்த வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும்: ரஷ்ய வீரர் பேட்டி + "||" + French Open; The players who brought me down should play well: Russian player

பிரெஞ்சு ஓபன்; என்னை வீழ்த்த வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும்: ரஷ்ய வீரர் பேட்டி

பிரெஞ்சு ஓபன்; என்னை வீழ்த்த வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும்:  ரஷ்ய வீரர் பேட்டி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் என்னை வீழ்த்த வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் கூறியுள்ளார்.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், உலக தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ், 3வது சுற்று போட்டியில் ரெய்லி ஓபல்காவை 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த ஆண்டு களிமண் தரையில் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டியை சிறப்பாக நான் உணர்கிறேன்.

என்னை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று தற்போது எனக்கு நன்றாக தெரிகிறது.  என்னுடைய விளையாட்டிற்காக நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சிறிது மழை பெய்த சூழ்நிலை, ஈரம் நிறைந்த களிமண் தரையை நான் முற்றிலும் வெறுப்பவன்.  ஆனால், இன்று எனக்கு அது உதவியாக இருந்தது என கூறியுள்ளார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதி சுற்று வரை மெட்வடேவ் முன்னேறினால் ஏ.டி.பி. தரவரிசையில் நோவக் ஜோகோவிக்கை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு செல்லும் பொன்னான வாய்ப்பு மெட்வடேவுக்கு உள்ளது.

இதேபோன்று ஜோகோவிக்கும், இறுதி போட்டிக்கு வராமல் இருக்க வேண்டும்.  அடுத்த போட்டியில் கிறிஸ்டியன் கேரீனை, ரஷ்ய வீரர் மெட்வடேவ் சந்திக்கிறார்.