டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + French Open tennis: Reigning champion Nadal advances to 4th round

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:  நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் 3வது சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் ரபேல் நடால் மற்றும் இங்கிலாந்து நாட்டின் கேமரூன் நார்ரீ ஆகியோர் விளையாடினர்.

இதில், முதல் செட்டில் 3 புள்ளிகளை இழந்த நடால் அதன்பின்பு அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.  முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார்.  கேமரூனுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காத வகையில், தொடர்ந்து அடுத்தடுத்த செட்களில் வெற்றி பெற்றார்.

இதனால், 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் நடால், கேமரூனை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  இதேபோன்று மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஜோகோவிக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி: பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேற்றம்
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து மற்றும் கிதம்பி ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர்.
2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் அஸ்வின், ரோகித் சர்மா முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ரோகித் சர்மா வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளனர்.
3. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவை வீழ்த்தி நவோமி ஒசாகா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
4. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடால் 4வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
5. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிக் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.