டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: போராடி வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு பெடரர் தகுதி + "||" + Federer qualifies for 4th round of French Open tennis

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: போராடி வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு பெடரர் தகுதி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:  போராடி வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு பெடரர் தகுதி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் கடுமையாக போராடி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில், இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் தலைசிறந்த வீரர் ரோஜர் பெடரர் மற்றும் உலக தர வரிசையில் 59வது இடம் பெற்றுள்ள ஜெர்மனியின் டோமினிக் கோப்ஃபர் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், முதல் செட்டில் கடுமையாக போராடி பெடரர் 7-6(5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  எனினும் அடுத்த செட்டை 6-7(3) என்ற செட் கணக்கில் டோமினிக் கைப்பற்றினார்.

இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.  தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த விளையாட்டில் பெடரருக்கு கடுமையான போட்டி காத்திருந்தது.  இதில், 3வது செட்டை 7-6(4) என்ற புள்ளி கணக்கில் பெடரர் கைப்பற்றினார்.  அதன்பின்னர் 4வது செட்டில் 7-5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று டோமினிக்கை வீழ்த்தி 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரெஞ்சு ஓபனில் நடப்பு சாம்பியன் ரபேல் நடாலும் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.  நேற்று நடந்த போட்டியில் அவர், இங்கிலாந்து நாட்டின் கேமரூன் நார்ரீயை 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.  இதேபோன்று மற்றொரு போட்டியில் உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஜோகோவிக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தையில் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ராகேஷ் குமார் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
2. டோக்கியோ பாராஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக் மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி
டோக்கியோ பாராஒலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனா பட்டேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
4. ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு இந்தியா தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி; துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி ஸ்டேஜ் 2க்கு தகுதி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மானு பாக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி இணை ஸ்டேஜ் 2க்கு தகுதி பெற்றுள்ளது.