டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம் + "||" + French Open tennis: Russian player advances to final

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரஷ்ய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்:  ரஷ்ய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீராங்கனை பாவ்லியூசெங்கோவா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பாரீஸ்,


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடந்து வருகின்றன.

இதில், மகளிர் ஒற்றையர் அரை இறுதி ஆட்டமொன்றில் ரஷ்ய வீராங்கனை அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவா மற்றும் சுலொவேனியா வீராங்கனை தமரா ஜிடன்செக் ஆகியோர் இன்று விளையாடினர்.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், முதல் செட்டில் இருவரும் விட்டு கொடுக்காமல் அதிரடியாக விளையாடினர்.  ஒரு கட்டத்தில், 5-5 என்ற செட் கணக்கில் போட்டி ‘டை’ ஆகி இருந்தது.

அதன்பின்னர் முதல் செட்டை 7-5 என்ற செட் கணக்கில் ரஷ்ய வீராங்கனை கைப்பற்றினார்.  அதன் தொடர்ச்சியாக 2வது செட்டையும் கைப்பற்றி ஜிடென்செக்கை வீழ்த்தினார்.  இதனால், 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ரஷ்ய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.