டென்னிஸ்

விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகளில் ஆடமாட்டேன்: ரபேல் நடால் + "||" + Rafael Nadal pulls out of Wimbledon and Tokyo Olympics

விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகளில் ஆடமாட்டேன்: ரபேல் நடால்

விம்பிள்டன், ஒலிம்பிக் போட்டிகளில் ஆடமாட்டேன்: ரபேல் நடால்
உலகின் 3-ம் நிலை டென்னிஸ் வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதியில் செர்பியாவின் ஜோகோவிச்சிடம் போராடி தோல்வி அடைந்தார்.
இந்த முறையும் பிரெஞ்ச் ஓபனில் பட்டத்தை கைப்பற்றி அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் சாதனையை முறியடிக்கும் முனைப்புடன் காத்திருந்த நடாலின் ஆசைக்கு ஜோகோவிச் முட்டுக்கட்டை போட்டார். இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி லண்டனில் தொடங்கும் விம்பிள்டன் டென்னிசிலும், அடுத்த மாதம் 23-ந்தேதி டோக்கியோவில் தொடங்கும் ஒலிம்பிக் போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்று 35 வயதான நடால் திடீரென அறிவித்துள்ளார். ‘இந்த முடிவை நான் எளிதாக எடுத்து விடவில்லை. ஆனால் எனது உடல்நிலை பழைய நிலைக்கு திரும்ப ஓய்வு தேவைப்படுகிறது. உடல் சொல்வதை கேட்க வேண்டியது முக்கியம்’ என்று நடால் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. விம்பிள்டன் தொடரில் ரஷியா, பெலாரஸ் வீரர்களுக்கு தடை - நோவக் ஜோகோவிச் கண்டனம்
ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு ஜோகோவிச் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. 15 வயது ரஷிய ஸ்கேட்டிங் வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி
15 வயது ரஷிய ஸ்கேட்டிங் வீராங்கனை ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.