டென்னிஸ்

ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் + "||" + Germany Bat Homburg Cross Court Tennis Tournament Angelique Kerber Champion

ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்

ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டி - உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன்
ஜெர்மனி பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் பட்டம் வென்றார்.
பெர்லின்,

ஜெர்மனியில் நடைபெற்ற பேட் ஹாம்பா்க் கிராஸ் கோா்ட் டென்னிஸ் போட்டியில் உள்நாட்டு வீராங்கனை ஏஞ்செலிக் கெர்பா் சாம்பியன் ஆனாா். கடந்த 3 ஆண்டுகளில் இது அவரது முதல் டபிள்யூடிஏ பட்டமாகும். இறுதிச்சுற்றில் செக் குடியரசின் காடெரினா சினியாகோவாவை எதிா்கொண்ட கொபா் 6-3, 6-2 என்ற நோ செட்களில் வெற்றி பெற்றாா்.

கடந்த 2018 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தாா் கெர்பா். அதன் பிறகு 2019-இல் இரு போட்டிகளில் பங்கேற்று இறுதி ஆட்டம் வரை வந்து தோற்றாா். இந்த நிலையில் தற்போது டென்னிஸ் வரலாற்றில் 13-ஆவது பட்டத்தை வென்றுள்ளாா்.

கிராஸ் கோா்ட் போட்டிகளில் கொபா் சாம்பியன் ஆகியிருப்பது இது 3-ஆவது முறை ஆகும். கடந்த 2015-இல் பிா்மிங்ஹாம் போட்டியிலும், 2018-இல் விம்பிள்டனிலும் வெற்றி பெற்ற ஏஞ்செலிக் கெர்பா், தற்போது பேட் ஹாம்பா்கில் சாம்பியன் ஆகியிருக்கிறாா்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெர்மனியில் 43 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,182 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கனமழை-வெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 168- ஆக உயர்வு
மேற்கு ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பேரழிவுகரமான வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 168-ஐ கடந்துள்ளது.
3. ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் கன மழை-வெள்ளம்: பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு
ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் கனமழை கொட்டி தீர்த்தது.
4. ஜெர்மனியில் கத்திக்குத்து; 2 பேர் படுகாயம்
ஜெர்மனியின் மத்திய பகுதியில் உள்ள எர்பட் நகரில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
5. குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த ஜெர்மனி
வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.