டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி + "||" + Wimbledon tennis match: Novak Djokovic wins first round

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி:  நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.


லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.  இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியன் மற்றும் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்து நாட்டின் ஜேக் டிராப்பர் ஆகியோர் விளையாடினர்.

முதல் செட்டை டிராப்பர் கைப்பற்றினார்.  எனினும், 2வது செட்டில் அதிரடியாக விளையாடிய ஜோகோவிச், தொடர்ந்து 3வது மற்றும் 4வது செட்டுகளை வென்று அசத்தினார்.  இதனால் 4-6, 6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் போட்டியில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதில் வெற்றி பெற்றால், 6வது விம்பிள்டன் பட்டம் மற்றும் 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெருமைக்கு உரியவராவார்.


தொடர்புடைய செய்திகள்

1. சர்வதேச பளுதூக்கும் போட்டி
சர்வதேச பளுதூக்கும் போட்டி
2. புதுக்கோட்டையில் மாநில அளவிலான கால்பந்து போட்டி
மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி; ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
4. மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி: கர்நாடக மக்களுக்கு ஜே.பி.நட்டா நன்றி
கர்நாடகத்தில் 3 மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது.
5. இந்திய அணி அபார வெற்றி: தொடரில் முன்னிலை பெற்றது
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.