4-வது முறையாக ஒலிம்பிக்கில் ஆடுகிறார், சானியா


4-வது முறையாக ஒலிம்பிக்கில் ஆடுகிறார், சானியா
x
தினத்தந்தி 2 July 2021 11:18 PM GMT (Updated: 2021-07-03T04:48:57+05:30)

சானியா மிர்சா ஒலிம்பிக்கில் 4-வது முறையாக ஆடுகிறார்.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் சானியா மிர்சா- அங்கிதா ரெய்னா ஜோடி பங்கேற்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது. சானியாவுக்கு இது 4-வது ஒலிம்பிக் போட்டியாகும். இதன் மூலம் 4 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை அவர் பெறுகிறார். அங்கிதா, ஒலிம்பிக்கில் கால்பதிப்பது இதுவே முதல்முறையாகும். அவர்களுக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் விம்பிள்டன் டென்னிசில் இருவரும் வெவ்வேறு ஜோடிகளுடன் கைகோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story