டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சானியா-போபண்ணா ஜோடி + "||" + Wimbledon Tennis: Sania-Bopanna pair in 3rd round

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சானியா-போபண்ணா ஜோடி

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சானியா-போபண்ணா ஜோடி
விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் சானியா-போபண்ணா ஜோடி.
லண்டன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன் ’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கேத்ரினா சினியகோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். இதே போல் ஆண்கள் பிரிவில் 2-ம் நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), குரோஷியாவின் மரின் சிலிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இரு செட்டுகளை பறிகொடுத்த நிலையில், அதன் பிறகு சரிவில் இருந்து எழுச்சி பெற்றார். 3 மணி 36 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் மெட்விேடவ் 6-7 (3-7), 3-6, 6-3, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.


பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- அமெரிக்காவின் பெதானி மாடக் சான்ட்ஸ் கூட்டணி 4-6, 3-6 என்ற நேர் செட்டில் ரஷியாவின் எலினா வெஸ்னினா- குடெர்மெட்டோவா இணையிடம் பணிந்து வெளியேறியது. இதைத் தொடர்ந்து நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியினர் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெறும் 47 நிமிடங்களில் இங்கிலாந்தின் எய்டன் மெக்ஹக்- எமிலி வெப்லி சுமித் இணையை விரட்டியடித்து 3-வது சுற்றை எட்டினர். அடுத்து இவர்கள் ஜூலியன் ரோஜர் (நெதர்லாந்து)- ஆன்ட்ரியா கிலெபக் (சுலோவெனியா) ஜோடியுடன் மோத உள்ளனர்.

போட்டியில் ேநற்று ஓய்வு நாளாகும். ஒற்றையர் பிரிவில் இன்று (திங்கட்கிழமை) 4-வது சுற்று ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் (செர்பியா)-கிறிஸ்டியன் காரின் (சிலி), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து)- லோரென்சோ சோனிகோ (இத்தாலி), பெண்கள் பிரிவில் ஸ்வியாடெக் (போலந்து)- ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா), ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா)- கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), சபலென்கா (பெலாரஸ்)- ைரபகினா (கஜகஸ்தான்) ஆகியோரது ஆட்டங்களும் அடங்கும்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இளம் வீராங்கனைகளான லேலா பெர்னாண்டஸ்-எம்மா ராட்கானு மோதுகிறார்கள்.
2. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அரைஇறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் அரைஇறுதிக்கு முன்னேறினார்கள்.
3. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ், சபலென்கா கால்இறுதிக்கு முன்னேற்றம்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷிய வீரர் மெட்விடேவ், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா ஆகியோர் கால்இறுதிக்கு முன்னேறினர்.
4. அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி தோல்வி.
5. சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் அலெக்சாண்டர்- ரூப்லெவ்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷியாவின் ரூப்லெவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.